மிரட்டும் மில்டன் சூறாவளி! விண்வெளியில் இருந்து கிடைத்த பிரமிக்க வைக்கும் காட்சி
நாசா விண்வெளி வீரர் மில்டன் சூறாவளியை விண்வெளியிலிருந்து படம்பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிரட்டும் மில்டன் சூறாவளி!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து நாசா விண்வெளி வீரர் ஒருவர், மில்டன் புயலின் அளவு மற்றும் சக்தியை காட்டும் அழகான timelapse வீடியோ ஒன்றை படம்பிடித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை டிராகன் எண்டேவர்(Dragon Endeavor) என்ற விண்கலத்தின் ஜன்னலில் இருந்து இந்த ரம்மியமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Timelapse flying by Hurricane Milton about 2 hours ago.
— Matthew Dominick (@dominickmatthew) October 8, 2024
1/6400 sec exposure, 14mm, ISO 500, 0.5 sec interval, 30fps pic.twitter.com/p5wBlC95mx
மேத்யூ டொமினிக் (Matthew Dominick) என்ற விண்வெளி வீரர் டிராகன் எண்டேவர் விண்கலத்தில் இருந்து இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
டிராகன் எண்டேவர் விண்கலம் அக்டோபர் 7ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில், மில்டன் சூறாவளி காரணமாக இந்த நடைமுறை அக்டோபர் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9 மில்லியன் பார்வையாளர்கள்
மில்டன் சூறாவளி வழியாக பறந்த போது அதன் பிரமிக்க வைக்கும் அளவு மற்றும் சக்தியை வெளிப்படுத்துவதற்காக விண்வெளி வீரர் டொமினிக் timelapse வீடியோ காட்சியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் விவரத்தில், “ 2 மணி நேரத்திற்கு முன்பு மில்டன் சூறாவளி வழியாக timelapse காட்சிகளுடன் பறந்த போது என குறிப்பிட்டு 1/6400 sec exposure, 14mm, ISO 500, 0.5-sec interval, 30fps என கேமரா அமைப்பு நுணுக்கங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி சுமார் 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதில் பார்வையாளர் ஒருவர், கண்களால் நம்பமுடியாத காட்சி! என விவரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |