விண்வெளிக்குச் சென்று திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எப்படி இருக்கிறார்?
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில், இப்படி நீண்ட காலமாக விண்வெளியில் தங்கியிருப்பதால் அவரது உடலில் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அறிவியலாளர்கள் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ் எப்படி இருக்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ் (59), அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவராம். ஆனால், இப்போது தான் களைப்பாக உணர்வதாகவும், அதனால் அதிகாலையில் எழுவது தனக்குக் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் சுனிதா.
AP
சுனிதாவும், பட்ச் வில்மோரும், விண்வெளியிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
உடலிலுள்ள சதைகளை மீண்டும் வலுப்படுத்துவதற்காக, நாளொன்றிற்கு இரண்டு மணி நேரம் அவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
பிஸியோதெரபி சிகிச்சை முடிந்தாலும், தான் இன்னமும் முதுகு வலியால் அவதியுற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார் பட்ச் வில்மோர் (62).
AP
ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை கேப்டன்களான சுனிதாவும் வில்மோரும், கூடுதல் காலம் விண்வெளியில் தங்க நேர்ந்ததைக் குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்கிறார்கள்.
ஆனால், அது தங்கள் குடும்பத்தினருக்கு கடினமான ஒன்றாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.