சந்திரனில் நடந்து வரலாறு படைத்த நாசா விண்வெளி வீரர்கள் - முழு விபரங்கள் இதோ!
சந்திரனில் மனிதகுலத்தின் முதல் அடிகள் முதல், மொத்தம் பன்னிரண்டு விண்வெளி வீரர்கள் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர்.
இந்த துணிச்சலான நபர்கள் தங்கள் அற்புதமான பணிகளால் வரலாற்றை உருவாக்கினர். சந்திரனில் நடந்த சில நாசா விண்வெளி வீரர்கள் யார் என குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong)
Mission: Apollo 11
திகதி: ஜூலை 20, 1969
நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் நபர். "இது மனிதனுக்கு ஒரு சிறிய படி, மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்" என்ற அவரது புகழ்பெற்ற வார்த்தைகள், விண்வெளி ஆய்வில் ஒரு மகத்தான தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
2. Buzz Aldrin
Mission: Apollo 11
திகதி : ஜூலை 20, 1969
Buzz Aldrin ஆம்ஸ்ட்ராங்கைப் பின்தொடர்ந்து சந்திரனில் நடந்த இரண்டாவது நபர் ஆனார். Apollo 11 பணியில் இவரது பங்கு முக்கியமானதான கருதப்பட்டது. அதுவே அவருடைய வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தது.
3. Charles “Pete” Conrad
Mission: Apollo 12
திகதி : நவம்பர் 19, 1969
சந்திரனில் நடந்த மூன்றாவது நபராக இவர் இருக்கிறார். இவர் Apollo 12 திட்டத்தின் மூலம் சென்றார். இது சர்வேயர் 3 விண்கலத்திற்கு அருகில் தரையிறங்கியது.
4. Alan L. Bean
Mission: Apollo 12
திகதி : நவம்பர் 19, 1969
சந்திரனில் நடந்த நான்காவது விண்வெளி வீரரான ஆலன் பீன். இவரடைய பயணத்தின் போது கான்ராடுடன் சேர்ந்து சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்தார்.
5. Edgar D. Mitchell
Mission: Apollo 14
திகதி: பிப்ரவரி 6, 1971
சந்திரனில் நடந்த ஆறாவது நபர் எட்கர் மிட்செல் ஆவார். அப்பல்லோ 14 பயணத்தின் போது அவரது அறிவியல் சோதனைகள் சந்திர மேற்பரப்பு பற்றிய ஆய்வை மேறகொள்வதற்கு உதவியாக இருந்தது.
6. David R. Scott
Mission: Apollo 15
திகதி : ஜூலை 31, 1971
சந்திரனில் நடந்த ஏழாவது விண்வெளி வீரராக டேவிட் ஸ்காட் போற்றப்படுகிறார். இவர் Apollo 15 பயணத்தை வழிநடத்தி, நிலவின் மேற்பரப்பில் விரிவான புவியியல் ஆய்வுகளை நடத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |