பூமிக்கு 2வது நிலா கண்டுபிடிப்பு - ஆனால் 2083 ஆம் ஆண்டு வரை மட்டுமே
பூமிக்கு ஒரு நிலா இருப்பதும், அது 27.3 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த நிலவை மையமாக வைத்து பல்வேறு ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
பூமிக்கு 2வது நிலா
தற்போது பூமிக்கு 2வதாக ஒரு நிலா கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
2025 PN7 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நிலாவை, Quasi Moon என விண்வெளி ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
ஆஸ்டிராய்டு (Asteroid) ஆன இந்த 2ஆம் நிலா, வழக்கமான நிலவை விட அளவில் மிகச்சிறியது ஆகும். இதன் அளவு 18 முதல் 36 மீட்டர் அகலம் மட்டுமே ஆகும்.
இது, பூமியில் இருந்து 4 மில்லியன் முதல் 60 மில்லியன் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வெறும் கண்களினாலோ அல்லது வழக்கமான தொலைநோக்கிகள் மூலமோ பார்க்க இயலாது.
2083 ஆம் ஆண்டு வரை
இந்த நிலா பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றிவருகிறது. ஆனால், பூமியை போலவே சூரியனை சுற்றும் சுற்றுப்பாதையும், வேகமும் ஒரே அளவில் உள்ளதால் இதனை Quasi Moon என அழைக்கின்றனர்.
1960 ஆம் ஆண்டு முதல் உள்ள இந்த 2வது நிலவை ஹவாய்யை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஈர்ப்புவிசையில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக இந்த 2வது நிலவானது 2083 ஆம் ஆண்டில் இருந்து அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகும் என கணித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |