பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் பயணம் - இந்த 3 பேருக்கும் மட்டும் சலுகை
பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் போன்ற உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் தலைவர்களுக்கு கூட பிற நாடுகளுக்கு செல்வதற்கு ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள்.ஆனால், இவர்களுக்கு வழக்கமான சோதனைகள் இருக்காது.
ஆனால், 3 பேர் மட்டும் உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் பாஸ்போர்ட் இல்லாமல் சென்று வரும் சிறப்பை பெற்றுள்ளனர்.
பிரித்தானிய மன்னர் சார்லஸ்
பிரித்தானியாவில் உள்ள குடிமக்களுக்கு பிரித்தானிய மன்னர் பெயரிலேயே பாஸ்போர்ட் வழங்கப்படும். ஆனால் அவர் பாஸ்போர்ட் வைத்துக்கொள்வதில்லை.
பிரித்தானிய மன்னரின் வெளிநாட்டு பயணங்களை அவரது தனிச்செயலாளர் நிர்வகிக்கிறார். அவர் மன்னரின் வெளிநாட்டு பயணங்களை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நாட்டிற்கு தெரிவித்து விடுவார்.
இந்த சலுகை பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவி கமீலாவிற்கு கிடையாது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இந்த சலுகை வழங்கப்பட்டது. அவர் எந்த பாஸ்போர்ட்டும் வைத்திருக்கவில்லை.
ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி
இதே போல், ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ மற்றும் பேரரசி மசாகோ பாஸ்போர்ட் வைத்திருப்பதில்லை. அவர்கள் எந்த நாட்டிற்கும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாம்.
இவர்களின் அரசு முறை பயணத்தை ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது. சம்மந்தப்பட்ட நாடுகளிடம் முன்கூட்டியே பயணத்திட்டத்தை தெரிவித்து விடுவார்கள்.
பயண சலுகைகள் மட்டுமல்லாது, இவர்களை எந்த நாட்டிலும் விசாரிக்கவோ, கைது செய்யவோ முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |