நிலவில் உறவு கொள்ள ரூ.183 கோடி மதிப்பு பாறையை நாசாவில் திருடிய இளைஞர்
நிலவில் இருந்து எடுத்து வந்த பாறையை நாசாவில் இருந்து இளைஞர் திருடியுள்ளார்.
நாசாவில் திருட்டு
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆய்வுக்காக அப்போல்லோ திட்டம் மூலம் நிலாவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்து, ஜான்சன் விண்வெளி மையத்தில் வைத்திருந்தது.
2002 ஆம் ஆண்டு, உட்டா பல்கலைகழகத்தில் இயற்பியல், புவியியல், புவிஇயற்பியல் ஆகிய 3 பட்டங்களை முடித்த தாட் ராபர்ட்ஸ்(Thad Roberts) என்ற 24 வயது இளைஞர் பயிற்சிக்காக நாசா வந்தார்.
அதே காலக்கட்டத்தில், டிஃப்பணி போவ்லர்(Tiffany fowler) என்ற 22 வயதான பெண்ணும் பயிற்சிக்காக அங்கு சேர்ந்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில், பயிற்சிக்கு வந்த மற்ற இருவருடன் இணைந்து, ஜூலை மாதத்தில் ஒரு நாள், 31 வடக்கு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலவில் எடுக்கப்பட்ட பாறையையும், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் ALH 84001ஒன்றை விண்கல்லையும் திருடியுள்ளனர்.
17 பவுண்ட் எடையுள்ள அந்த நிலவின் பாறையின் மதிப்பு 21 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.183 கோடி) ஆகும்.
நிலவில் உறவு
இந்த பாறையை காதலியுடன் உறவு கொள்ளும் முன்னர் படுக்கையின் கீழே வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் இதை காதலுக்காக செய்தேன். நான் நேசிக்கப்பட்ட வேண்டும் என செய்தேன். நான் எவ்வளவு காதலிக்கிறேன் என யாராவது தெரிந்து கொள்ள வேண்டும் என செய்தேன்.
இதற்கு முன்னர் யாரும் நிலவில் உறவு கொண்டதில்லை. ஆனால் நாங்கள் அதை பாதுகாப்பாக செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் அவர் இதை செய்ததாக FBI தெரிவித்துள்ளது.
காதல் பிரிவு
நிலவின் பாறையை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு நபருக்கு விற்க முயன்றுள்ளார் தாட் ராபர்ட்ஸ். அந்த நபர், ஒரு கிராமுக்கு 1,000 முதல் 5,000 டொலர் வரையிலான விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளார்.
இருப்பினும் அதன் தோற்றம் குறித்த சந்தேகத்தால், FBI க்கு தகவல் அளித்துள்ளார். FBI அதிகாரிகள் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, பாறையை வாங்க ஆர்வம் காட்டுவது போல் பேசி நேரில் வரவழைத்து கைது செய்துள்ளனர்.
மேலும், தாட் ராபர்ட்ஸ் ஏற்கனவே பல்கலைகழகத்தில் படிக்கும் போது டைனோசரின் எலும்புகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார்.
அவரது காதலி டிஃப்பணி போவ்லருக்கு வீட்டு காவல் வழங்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திற்கு பின்னர், காதலரை பிரிவதாக டிஃப்பணி போவ்லர் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |