நிலவில் ரயில் பாதையை உருவாக்கும் நாசா - முழு விபரம் இதோ!
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA), சந்திரனில் போக்குவரத்திற்காக முதல் சந்திர ரயில் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
நிலவில் ரயில் பாதை
நாசா முன்வைத்த திட்டங்களின்படி, ஒவ்வொரு மிதக்கும் ரோபோவும் 30 கிலோ வரையிலான சரக்குகளை ரயில் பாதைகளில் கொண்டு செல்ல முடியும்.

ETHAN SCHALER/NASA 
பூமியில் உள்ள ரயில் பாதைகளைப் போலல்லாமல், அவை கட்டப்பட்டு தரையில் துளையிடப்படுகின்றன, இந்த தடங்கள் சந்திரனின் மேற்பரப்பில் வெறுமனே இருக்கும், எந்த சேதமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முன்மாதிரி ரோபோக்களுடன் இந்த யோசனை முதலில் பூமியில் சோதிக்கப்படும்.

ETHAN SCHALER/NASA 
இந்த பாதையை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்கள் இலகுவானதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 1.61 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த ரோபோக்களில் வண்டிகள் பொருத்தப்படும். இது ஒரு நாளைக்கு 100 டன் பொருட்களை நாசா தளத்திற்கு கொண்டு செல்ல முடியும் என நாசா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  |