நிலவில் அணு உலை அமைக்க NASA திட்டம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA நிலவில் அணு உலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், நாசாவின் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்ட அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) நிலவின் மேற்பரப்பில் அணு உலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, ட்ரம்ப்-வான்ஸ் நிர்வாகத்தில் முன்மொழியப்பட்ட குறைவான பட்ஜெட் நாசாவின் பல விண்வெளி திட்டங்களுக்கான நிதியில் பற்றாக்குறை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திட்டம் அறிவிக்கப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகப்படியான நீர் வளத்தைத் தேடி நிலவின் தென் துருவத்தை நோக்கி அனைத்து முக்கிய விண்வெளி பயண நாடுகளும் படையெடுத்து வருகின்றன.
அங்கு நீர் கண்டுபிடிக்கப்பட்டால், உயிர் ஆதரவு அமைப்புகளுக்கு தேவியான தண்ணீரை பிரித்தெடுக்க முடியும், அதேசமயம் ரொக்கெட் எரிபொருளை உருவாக்கமுடியும் என நம்பப்படுகிறது.
நிலவின் இருண்ட தென்துருவத்தில் உள்ள பள்ளங்களில் நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகளால் சந்தேகிக்கப்படுகிறது.
எப்போதும், சூரிய வெளிச்சம் துளியும் புகாமல் இருக்கும் அந்த பள்ளங்களில், அணு உலையின் மூலம் மின்சாரத்தையும் சக்தியையும் வழங்கமுடியும். அதன்பிறகு அங்கிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க முடியும் என கூறப்படுகிறது.
மனிதர்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக நிலவில் Fission Surface Power Project எனும் மின்சார உற்பத்தி திட்டத்தை நாசா முன்னெடுத்துவருகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் இத்திட்டத்தை செய்லபடுத்த உந்துதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |