ஜேம்ஸ் வெப்பின் விண்வெளி புகைப்படத்தை இசை வடிவத்தில் வெளியிட்ட நாசா! வைரலாகும் காணொளி
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட அண்டத்தின் அரிய புகைப்படத்தை நாசா இசையாக மாற்றி வெளியிட்டுள்ளது.
நாசாவுடன் இணைந்து, விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளனர்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் முதல் முழு வண்ண அகச்சிவப்பு புகைப்படங்கள் மற்றும் தரவுகளை அனுபவிப்பதற்கான ஒரு தனித்துவமான, ஊடாடும் முறையாக ஒலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹாட் கேஸ் ராட்சத எக்ஸோப்ளானெட் என்று அழைக்கக்கூடிய WASP-96 B கோளின் டிரான்ஸ்மிஷன் ஸ்பெக்ட்ரம் காட்டப்பட்டுள்ளது, இது கேட்போர் கரினா நெபுலாவில் உள்ள காஸ்மிக் க்ளிஃப்ஸின் சிக்கலான ஒலி சூழலை அணுகவும், Southern Ring Nebulaவை சித்தரிக்கும் இரண்டு புகைப்படங்களின் மாறுபட்ட டோன்களை ஆராயவும் அனுமதிக்கிறது.
NASA
Webb திட்டம் மற்றும் நாசாவின் Universe of Learning மூலம், விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த புகைப்படத்தின் தரவுகளைத் தழுவி இந்த இசையை உருவாக்கியுள்ளனர்.
கனடாவின் ரொறண்ரோ பல்கலைக்கழகத்தின் இசைக்கலைஞரும் இயற்பியல் பேராசிரியருமான மாட் ருஸ்ஸோ இதுகுறித்து பேசுகையில், இந்த "இசை எங்கள் உணர்ச்சி மையங்களைத் தட்டுகிறது. வெப்பின் படங்கள் மற்றும் தரவுகளை ஒலியின் மூலம் புரிந்துகொள்ளச் செய்வதே எங்கள் குறிக்கோள் - கேட்போர் தங்கள் சொந்த மனப் படங்களை உருவாக்க உதவுவது" என்று கூறியுள்ளார்.
Hear that? ?
— NASA (@NASA) August 31, 2022
These soothing sounds depict the "Cosmic Cliffs" of the Carina Nebula. By translating data to sound, we can experience @NASAWebb's data in a new way. Also explore views of the Southern Ring Nebula and "hear" exoplanet WASP-96 b's atmosphere: https://t.co/wAk1eGKkpI pic.twitter.com/jkV0oDjFY9
நாசாவின் வெப் டெலஸ்கோப் கரினா நெபுலாவில் உள்ள காஸ்மிக் கிளிஃப்ஸின் அகச்சிவப்பு படத்தைப் பெற்றது, மேலும் அந்த படம் ஒரு இசை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. நெபுலாவின் semi-transparent, மெல்லிய பகுதிகள் மற்றும் வாயு மற்றும் தூசியின் அதிக அடர்த்தியான பகுதிகளுக்கு தனித்துவமான சுருதிகளை வழங்கி இசைக்கலைஞர்கள் இந்த இசையை உருவாக்கியுள்ளனர். மேலும், படம் இடமிருந்து வலமாக ஒலிக்கப்பட்டுள்ளது.