மூக்கடைப்பு பிரச்சினையால் அவதியா? உடனே சரியாக இதை செய்தால் போதும்
சளி, மூக்கடைப்பு பிரச்சினை பலருக்கும் அடிக்கடி வரும்.
ஒருசில எளிய இயற்கை நிவாரணிகள் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.
ஆவி பிடித்தல்
மூக்கடைப்பின் போது, ஆவிப் பிடித்தால், உடனே மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். மேலும் மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் குணமாகிவிடும். அதிலும் அரை வாளி சூடான நீரில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, ஆவி பிடித்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
சூடு நீர் குளியல்
மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீர் குளியலை மேற்கொண்டால், உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும். காரமான உணவுகள் நல்ல காரமான உணவுகளை சாப்பிட்டால், உடலில் வெப்பமானது அதிகரித்து, சளியானது தளர்ந்து வெளியேற்றப்படும். இதனால் மூக்கடைப்பும் நீங்கும்.
தண்ணீர் மற்றும் உப்பு
இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.
வெங்காயம்
மற்றொரு சிறந்த மூக்கடைப்பு நிவாரணி என்றால், அது வெங்காயத்தின் மூலம் தான். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும்.
சூடான டீ
மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபட வேண்டுமெனில், சூடான ஒரு கப் டீ குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான ஏதேனும் நீர்மத்தை குடித்தால், அது மூக்கில் அடைப்பை ஏற்படுத்திருக்கும் பொருளை தளரச் செய்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.