தென் ஆப்பிரிக்க அணிக்கு மரண அடிகொடுத்த பாகிஸ்தான்! 6 விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நஷ்ரா சந்து
லாகூரில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 25.5 ஓவரில் 115 ஓட்டங்களுக்கு சுருண்டது. லாவ்ரா வோல்வார்ட் 28 (23) ஓட்டங்கள் எடுத்தார். மிரட்டலாக பந்துவீசிய நஷ்ரா சந்து (Nashra Sandu) 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 31 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிட்ரா அமின் (Sidra Amin) 50 (94) ஓட்டங்களும், முனீபா அலி 44 (76) ஓட்டங்களும் எடுத்தனர்.
தொடரை இழந்த பாகிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தாலும், 115 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி மரண அடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |