நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்
அமெரிக்காவின் நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச்சூட்டின் தாக்குதல்தாரி, அதே பாடசாலையில் படித்த முன்னாள் மாணவர் என்பது உட்பட, அவரைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் உள்ள கான்வென்ட் பாடசாலையில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 குழந்தைகள் மற்றும் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
பல உண்மைகள்
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றிய தகவல்கள் நேற்று வெளிவராத நிலையில், இன்று அவரைப் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
ABC News
நாஷ்வில் நகரின் காவல்துறைத் தலைவர் இது குறித்து பேசுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், 28 வயதான நாஷ்வில் குடியிருப்பாளரும், அதே கான்வென்ட் பாடசாலையின் முன்னாள் மாணவருமான ஆட்ரி ஹேல் (Audrey Hale) என்று அடையாளம் காட்டினார். மேலும், அவர் ஒரு திருநங்கை என்று அடையாளம் காட்டினார்.
எந்த ஒரு குற்றப் பதிவுகளும் இல்லை
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஆட்ரி ஹேல் மீது எந்த ஒரு குற்றப் பதிவுகளும் இல்லை. அறிக்கைகளின்படி, ஹேல் Nossi கலைக் கல்லூரியில் 2022-ல் விளக்கப்படம் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பில் (illustration and graphic design) பட்டம் பெற்றார்.
ஆட்ரி ஹேல் ஒரு அறிக்கையை விட்டுச் சென்றார், அந்த அறிக்கையில் பாடசாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் (entry-exit points) மற்றும் சிசிடிவி கமெரா சாதனங்கள் பொருத்தப்பட்ட இடங்கள் என பாடசாலையின் வரைபடங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
MNDPNashville
பொலிஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்
ஆட்ரி ஹேல் "சட்ட அமலாக்கத்துடன் மோதலுக்கு தயாராக இருந்தார்" என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர் திட்டமிட்டிருந்த பல இடங்களில் பாடசாலை ஒன்று மட்டுமே வெகுஜன துப்பாக்கிச் சூடுகளுக்கு திட்டமிட்ட இடம் என்பதை அவர் விட்டுச் சென்ற அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆட்ரி ஹேல் குறைந்தபட்சம் இரண்டு தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியுடன் கான்வென்ட் பாடசாலைக்குள் நுழைந்தார். ஹேல் ஒரு பக்க நுழைவாயில் வழியாக பள்ளிக்குள் நுழைந்தார், கட்டிடத்தின் வழியாக முன்னேறும்போது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார், பின்னர் பொலிஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
AP Photo