லண்டன் பூங்காவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மாரடைப்பில் உயிரிழந்த பெண்! ஒத்துப்போன DNA மாதிரிகள்
பிரித்தானியாவில் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ள Southall பூங்காவின் இருக்கையில் சுயநினைவு இழந்து காணப்பட்ட பெண், அடையாளம் தெரியாத நபரால் பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
அப்போது 37 வயதான நடாலி ஷாட்டர்(Natalie Shotter) என்ற பெண், முகமது ஐடோவ்(Mohamed Iidow) என்ற 35 வயது நபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
Family handout/PA
ஆனால் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் முகமது ஐடோவ் மறுத்துள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
நீதிமன்ற விசாரணையின் போது வழக்கறிஞர் Alison Morgan, முகமது ஐடோவ் பாலியல் துஷ்பிரயோகத்தின் விளைவாக நடாலி ஷாட்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நீதியரசர்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும் சிசிடிவி காட்சிகளில் சோதனையிட்ட போது, பாதிக்கப்பட்ட நடாலி ஷாட்டரை சுற்றி குற்றம் சாட்டப்பட்ட முகமது ஐடோவ் பல்வேறு கோணங்களில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதும், நடாலி மாரடைப்பில் உயிரிழந்த 15 நிமிடங்களுக்கு பிறகும் அவருடன் முகமது ஜடோவ் வாய் வழி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதும் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட முகமது ஐடோவ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில், பாதிக்கப்பட்டு உயிரிழந்த நடாலி ஷாட்டரின் வாய் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் முகமது ஐடோவ்-வின் DNA உடன் ஒத்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |