உங்களை மிஸ் செய்கிறோம் சார்! விவேக் மறைவிற்கு தமிழக வீரர் நடராஜன் இரங்கல்
நடிவர் விவேக் மறைவுக்கு தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பால் காலமானார்.
அவரின் திடீர் மறைவு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சார்! நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் ##RIPVivekSir என பதிவிட்டுள்ளார்.
Rest in peace vivek sir !!💔 We miss u !!#RIPVivekSir pic.twitter.com/Ilc0z04RFa
— Natarajan (@Natarajan_91) April 17, 2021