வெறும் 15 நிமிடங்களில் ரஹேனே-புஜாரா அவுட்! மிரண்டு போக வைத்த தமிழன் நடராஜன்
இந்திய அணி வீரர்களுடனான வலை பயிற்சியின் போது, நடராஜன் முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் ராஹேனவின் விக்கெட்டை வெறும் 15 நிமிடங்களில் வீழ்த்தி மிரட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 26-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கி தமிழக வீரர் நடராஜன், வலைப்பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசு வருகிறார்.
அதன் படி வலைப்பயிற்சியின் போது, இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவின் விக்கெட்டை வெறும் 15 நிமிடங்களில் வீழ்த்தி மிரட்டியுள்ளார்.
பயிற்சியின் போது, நடராஜன் தொடர்ந்து யார்க்கர், பவுன்சர், ஸ்லோ பால் என்று மாறி மாறி பந்துகளை வீசி உள்ளார். இதனால் பேட்ஸ்மேன் திணறுவதாக கூறப்படுகிறது.