நடராஜனுக்கு இடம் இல்லை! இந்திய அணியில் முக்கிய மாற்றம்: 2-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா பேட்டிங்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போரினில் நடைபெற்று வருகிறது.
He battled personal tragedy, fought adversity and is now rewarded with India's Test ? no. 298. Congratulations Mohammed Siraj. Go seize the day! #TeamIndia #AUSvIND pic.twitter.com/D48TUJ4txp
— BCCI (@BCCI) December 25, 2020
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்த தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஷமி விலகியதன் காரணமாகவும், வலைப் பயிற்சியில் பந்து வீச்சில் மிரட்டியதன் காரணமாகவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2nd Test. India XI: S Gill, M Agarwal, C Pujara, A Rahane, H Vihari, R Pant, R Jadeja, R Ashwin, U Yadav, J Bumrah, M Siraj https://t.co/HL6BBEW6uY #AUSvIND
— BCCI (@BCCI) December 25, 2020
ஆனால், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணி சார்பில் சுப்மன் கில், சிராஸ் ஆகியோர் புதிதாக இன்றைய டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதுடன், ஜடேஜா மற்றும் பாண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோஹி, சஹா, ஷமி, துவக்க வீரர் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு பதிலாக இவர்கள் களமிறங்கியுள்ளனர்.