தமிழக வீரர் நடராஜன் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைகிறாரா?
தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் CSK அணியில் இணைய உள்ளதாக புகைப்படம் ஒன்று விவாதத்தை கிளப்பியுள்ளது.
நடராஜன்
கடந்த ஐபிஎல் சீசனில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியால் நடராஜன் வாங்கப்பட்டார்.
ஆனால் வெறும் 2 போட்டிகளுக்கு மட்டுமே அவர் களமிறக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைத்தானத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியில் நடராஜன் (Natarajan) பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
விவாதம்
இது அவர் CSK அணியில் இணைய உள்ளதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம் டி-ஷர்ட் தான்.
அதாவது அவர் சென்னை அணியின் டி-ஷர்ட்டை அணிந்துள்ளது வைரலாகியுள்ளதுதான் இந்த விவாதத்தை கிளம்பியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் நடராஜன் சென்னை அணியில் இணைய உள்ளார் என விவாதம் பரபரப்பாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |