BBL 2025-26: அசுரவேகத்தில் தாக்கிய ஸ்டார்க்! நின்று ஆடி 69 ரன் விளாசிய நேதன்
BBL போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்தது.
ஸ்டார்க்கின் தாக்குதல்
பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் போட்டி தி காபாவில் நடந்தது.
Mitch Starc can't believe it 😂
— KFC Big Bash League (@BBL) January 18, 2026
The Aussie quick has taken two wickets with full tosses in Brisbane! #BBL15 pic.twitter.com/4zCbqdHZL3
முதலில் பிரிஸ்பேன் அணி களமிறங்கிய ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சில் வில்டர்மத் (1), ரென்ஷா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
கவாஜாவின் விக்கெட்டை அப்போட் கைப்பற்ற, லபுஷேன் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஓட்டங்களை சேர்த்த நேதன் மெக்ஸ்வீணி (Nathan McSweeney) அரைசதம் விளாசினார்.
அவருடன் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்த மைக்கேல் நேசர் (Michael Neser) 15 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
Getty Images
நேதன் மெக்ஸ்வீணி
நேதன் மெக்ஸ்வீணி ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் (8 பவுண்டரிகள்) 69 ஓட்டங்கள் விளாச, பிரிஸ்பேன் ஹீட் அணி 171 ஓட்டங்கள் குவித்தது.
Getty Images
மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) 4 விக்கெட்டுகளும், சாம் கர்ரன் (Sam Curran) 2 விக்கெட்டுகளும், அப்போட் மற்றும் ஜோயெல் டேவிஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
50 for Nathan McSweeney!
— KFC Big Bash League (@BBL) January 18, 2026
That's a vital knock to keep the Heat alive in #BBL15. pic.twitter.com/YJwfF8PMZx
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |