இரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு பெருகும் ஆதரவு: பிரித்தானியா ஸ்தம்பிக்கும் உறுதி
பிரித்தானியாவில் இரயில் ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் தூய்மை பணியாளர்களும் களமிறங்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், குறிப்பிட்ட மூன்று நாட்கள் பிரித்தானியா ஸ்தம்பிக்கும் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். 1970களுக்கு பின்னர் பிரித்தானியாவில் இதுபோன்றதொரு நிலை உருவானதில்லை என்றே கூறப்படுகிறது.
ஜூன் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தொடர்புடைய தொழிலில் 500 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழப்பு ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
ஆனால் இரயில் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது மேலும் பரவி மேலதிக தொழிற்சங்கங்கள் இணையக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவின் விருந்தோம்பல்துறை தலைவர் கேட் நிக்கோல்ஸ் கூறுகையில், இந்த வேலைநிறுத்தங்களால் சுற்றுலா, நாடகத் தொழில்களுக்கு 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் இழப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ரயில் கட்டணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?
இந்த நிலையில், சுகாதாரத்துறை, செவிலியர்கள், மருத்துவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவைகளும் வேலை நிறுத்தத்தில் ஆதரவளிக்கலம் என்ற தகவலும் கசிந்துள்ளது.