இந்தியா, சீனாவை உள் இழுக்கும் நோட்டோ: ரஷ்யா கடும் எச்சரிக்கை!
மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவை கடுமையாக விமர்சித்த ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பிளவில் இந்தியா மற்றும் சீனாவும் உள் இழுக்கப்படுகிறார்கள் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் சமர்பித்து இருந்தனர்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் இந்த முயற்சிக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்த ரஷ்யா, இந்த முடிவு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்து இருந்தது.
இந்தநிலையில், நோட்டோவின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், நோட்டோவிற்கு எதிரான கடுமையான வார்த்தைகளை தெரிவித்தார்.
மேலும் மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பிளவுக்குள் சீனாவையும் இந்தியாவையும் இழுக்கும் வகையில் நோட்டோவின் கருத்துகள் இருப்பதாகவும், இரு நாடுகளின் விவகாரங்களிலும் நோட்டோ தன்னை ஈடுபடுத்த முற்படுகிறது என தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நோட்டோ தங்களை உலகின் பாதுகாப்பிற்கான பரிணாமத்தை பொறுப்பை பெற வேண்டும் என தெரிவிக்கிறார்கள், அவர்கள் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை பற்றி சொல்லும் போது குறிப்பாக இந்தியாவை தங்களது நெட்வொர்க்களுக்குள் ஈர்க்கவே அவர்கள் இந்த கூற்றை தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை... பிரான்சிலிருந்து ஒரு முக்கிய தகவல்
நோட்டோவின் அடுத்த தற்காப்பு கூட்டணியின் பாதுகாப்பு வரிசை தென் சீனக் கடலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.