டென்மார்க் ட்ரோன் சம்பவம்... பால்டிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நேட்டோ
டென்மார்க்கில் ட்ரோன் ஊடுருவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பால்டிக் பகுதியில் வான் பாதுகாப்பு போர்க்கப்பல் மற்றும் பிற ஆயுதங்களுடன் மேம்படுத்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
ட்ரோன் ஊடுருவல்கள்
டென்மார்க்கில் உள்ள இராணுவ நிலையங்களுக்கு அருகில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் இரவு முழுவதும் காணப்பட்டதாக ஆயுதப்படைகள் தெரிவித்தன. இந்த வாரம் விமான நிலையங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு அருகில் பல ட்ரோன் ஊடுருவல்கள் நடந்த நிலையிலேயே இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நோர்டிக் பிராந்தியத்தின் மிகவும் பரபரப்பான கோபன்ஹேகன் விமான நிலையம், அதன் வான்வெளியில் பல பெரிய ட்ரோன்கள் காணப்பட்டதால் திங்கள்கிழமை பல மணி நேரம் மூடப்பட்டது.
அடுத்த நாட்களில் ஐந்து சிறிய டென்மார்க் விமான நிலையங்கள், பொதுமக்கள் மற்றும் இராணுவம் இரண்டும் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கும் வகையில், பால்டிக் பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த இருப்பதாக நேட்டோ அறிவித்துள்ளது.
இதனிடையே, எந்த நாடுகள் கூடுதல் ஆயுதங்களை பங்களிக்கின்றன என்பது குறித்த விவரங்களை வழங்குவதில்லை என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த நிலையில், முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், நேட்டோ நாடுகள் போர்க்கப்பல்கள், ரோந்து விமானங்கள் மற்றும் கடற்படை ட்ரோன்களை இந்தப் பணியின் ஒரு பகுதியாக ஈடுபடுத்த உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |