ரஷ்யாவுடன் பெரிய அளவிலான ஆயுத மோதலுக்கு நேட்டோ தயாராகிறது- ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர்
2002 ஆம் ஆண்டின் ரோம் பிரகடனத்திற்கு மாறாக, ரஷ்யாவுடன் பெரிய அளவிலான ஆயுத மோதலுக்கு நேட்டோ தயாராகி வருவதாக ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் Alexander Fomin தெரிவித்துள்ளார்.
திங்களன்று மாஸ்கோவில் நடந்த இராணுவ இராஜதந்திர மாநாட்டில் Fomin கூறுகையில், ரஷ்யாவுடனான பெரிய அளவிலான, அதிக தீவிரம் கொண்ட ஆயுத மோதலுக்கு தயாராகும் நோக்கில், நேட்டோ இராணுவம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
நேட்டோவால் வெளியிடப்பட்ட சமீபத்திய கோட்பாட்டு ஆவணங்களில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முக்கிய ஆதாரமாக ரஷ்யா அடையாளம் காணப்பட்டுள்ளதாக Fomin சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் இராணுவ உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் மேற்கொள்ளும் நேட்டோவின் முயற்சிகள் முழு ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பல தசாப்தங்களாக நேட்டோவால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் துணை பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், 2002-ன் ரோம் பிரகடனம், ரஷ்யாவும் மேற்கத்திய கூட்டமைப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகக் கருதக்கூடாது என்று கூறுகிறது, இது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலைப்பாடு 2010ல் லிஸ்பனில் நடந்த ரஷ்யா-நேட்டோ கவுன்சிலின் உச்சிமாநாட்டில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.