உக்ரைனில் ரஷ்யா ரசாயன தாக்குதலை நடத்தலாம்: நேட்டோ பொதுச்செயலர் பகிரங்க எச்சரிக்கை!
ரஷ்யா உக்ரைனில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை வரும் நாள்களில் பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் Welt am Sonntag என்ற பத்திரிக்கைக்கு நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அளித்த பேட்டியில், ரஷ்ய வரும் நாள்களில் உக்ரைன் மீது ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சிலதினங்களாக ரஷ்யாவின் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் ஆய்வகங்களை பற்றிய பயங்கரமான தகவல்களை தொடர்ந்து பெற்றுவருகிறோம்.
இவற்றை உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் வளர்ந்து கொண்டே இருப்பதால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் தீவிரமடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
மேலும் ரஷ்யா அமெரிக்கா மீது சுமத்திவரும் பொய் குற்றச்சாட்டுகளால் நாம் மேலும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும், ஏன்னென்றால் அந்த குற்றசாட்டை அடிப்படையாக கொண்டு ரஷ்யா ரசாயன ஆயுத நடவடிக்கைகளைத் திட்டமிடலாம், அவ்வாறு ரஷ்யா ரசாயன மற்றும் உயிரியல் தாக்குதலை உக்ரைன் மீது நடத்தினால் அது மிகப்பெரிய போர் குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், உக்ரைனிய மக்கள் ரஷ்ய ராணுவத்தை துணிவுடன் எதிர்த்தாலும் வரும் நாள்களில் இன்னும் அதிகமான நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
'உங்க உயிரை நீங்கதான் காப்பாத்திக்கணும்' ரஷ்யர்களுக்கு ஜெலென்ஸ்கி நேரடி எச்சரிக்கை!