ஸ்பெயின் விவகாரம்... ட்ரம்பின் பழி வாங்கும் நகர்வை முறியடித்த நேட்டோ
ஈரான் போர் குறித்த ஸ்பெயினின் நிலைப்பாட்டிற்காக, நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய முற்படலாம் என்ற நிலை முறியடிக்கப்பட்டுள்ளது.
தண்டிப்பதற்கான
இந்த இராணுவக் கூட்டணியிலிருந்து உறுப்பு நாடுகளை இடைநீக்கம் செய்யவோ அல்லது வெளியேற்றவோ எவ்வித விதியும் இல்லை என்று நேட்டோ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதாகத் தாங்கள் கருதிய நட்பு நாடுகளை அமெரிக்கா தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை பென்டகன் பரிந்துரைத்திருந்தது என்ற தகவல் கசிந்துள்ளது.
அத்துடன், தெற்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள, அர்ஜென்டினாவாலும் உரிமை கோரப்படும் ஃபாக்லேண்ட் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுஆய்வு செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேட்டோ உறுப்புரிமையை இடைநீக்கம் செய்வதற்கோ அல்லது வெளியேற்றுவதற்கோ அதன் ஸ்தாபக ஒப்பந்தத்தில் எந்தவொரு விதியும் குறிப்பிடப்படவில்லை என்று நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோவில் இருந்து தங்களின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்ய வாய்ப்பில்லை என்றும் ஸ்பெயின் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பென்டகன் பத்திரிகை செயலாளர் கிங்ஸ்லி வில்சன் தெரிவிக்கையில், அமெரிக்கா தனது நேட்டோ கூட்டாளிகளுக்காக அனைத்தையும் செய்தபோதிலும், அவர்கள் எங்களுக்காக உடனிருக்கவில்லை என்றார்.
தயக்கம் காட்டுவதாக
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பின்னர், நேட்டோ கூட்டணி நாடுகள் ஆதரவளிக்கத் தயக்கம் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்காகத் தங்களது பிரதேசத்தில் உள்ள விமானத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

நாங்கள், இந்த விடயத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளுடன் செயலாற்றுவோம், கசிந்த மின் அஞ்சல்களால் அல்ல என்றார்.
மட்டுமின்றி, ஸ்பெயின் தனது நட்பு நாடுகளுடன் முழுமையான ஒத்துழைப்பை ஆதரிக்கும் என்றும், ஆனால், எப்போதும் சர்வதேச சட்டத்தின் வரம்பிற்குள்ளேயே அது அமைந்திருக்கும் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |