ரஷ்யாவை அச்சுறுத்துவதை நேட்டோ நிறுத்தினால்...தாக்குதல் நிறுத்தப்படும்: மூத்த ரஷ்ய அதிகாரி தகவல்!
உக்ரைனிய நிலப்பரப்பை உபயோகித்து ரஷ்யாவை அச்சுறுத்தும் செயலை நேட்டோ அமைப்புகள் எப்போது கைவிடுகிறதோ அப்போது உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என ரஷ்ய வெளியுறவு துறையின் மூத்த அதிகாரி அலெக்ஸி போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது 56 நாள்களை கடந்து தற்போது இரண்டாம் கட்ட ராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை அதன் குறிக்கோள்களை அடையும் போது நிறைவடையும் என ரஷ்ய வெளியுறவு துறையின் மூத்த அதிகாரி அலெக்ஸி போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கையானது, அமைதியான டான்பாஸ் மக்களின் பாதுகாப்பு, உக்ரைனின் ராணுவமயமாக்குதல் மற்றும் அடக்குமுறையை இந்த பகுதிகளில் இருந்து நீக்குதல் போன்றவற்றுடன் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல நேட்டோ நாடுகளால் பிடிக்கப்பட்டுள்ள உக்ரைனிய பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு வரும் அச்சுறுத்தல்களை அகற்றுவதும் இந்த ராணுவ நடவடிக்கை முக்கிய குறிக்கோள் என அலெக்ஸி போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் எவ்வாறு நேட்டோ அமைப்பு உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துகிறது என்பதை அவர் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்தில், உக்ரைன் ராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்ட படி நடைபெற்று வருவதாகவும், அதன் அனைத்து குறிக்கோள்களையும் கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீழ்ந்துவிடும்... புடின் ஆதரவு செசன்ய தலைவர் அறிவிப்பு