ரஷ்யாவுக்கு அருகே குவியும் நேட்டோ படைகள்... நோர்வேவில் ராணுவ பயிற்சி!
ஐரோப்பிய நாடான நார்வேில், ரஷ்ய எல்லைக்கு அருகே நேட்டோ படைகள் ராணுவ பயிற்சியை தொடங்க இருக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்கு மத்தியில் நார்வேவில் மார்ச் 14ம் திகதி முதல் நேட்டோ படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் ராணுவ பயிற்சியை தொடங்க இருக்கின்றன.
ரஷ்யா எல்லையிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நார்வே பகுதியில் இந்த ராணுவ பயிற்சி நடைபெறவிருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னே இந்த ராணுவ பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், போருக்கு மத்திய நேட்டோ ராணுவ பயிற்சி மேற்கொள்வதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என நார்வே பாதுகாப்பு அமைச்சர் Odd Roger Enoksen கூறினார்.
இந்த பயிற்சியில் 27 நாடுகளின் 30,000 துருப்புகள், 200 போர் விமானங்கள் மற்றும் 40 கப்பல்பகள் பங்கேற்பதாகவும், இந்த வருடத்தில் நேட்டோ துருப்புகள் பங்கேற்கும் மிகப்பெரிய ராணுவ பயிற்சி இது என Enoksen குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த பயிற்சியை கண்காணிக்க கண்காணிப்பாளர்களை அனுப்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ரஷ்யா நிராகரித்துள்ளது.
ரஷ்யா எல்லைகளுக்கு அருகே நேட்டோ அதன் ராணுவ வசதிகளை கட்டமைப்பது, அப்பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் உதவாது என நார்வேவில் உள்ள ரஷ்ய தூதரதம் தெரிவித்துள்ளது.