நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேறும் அமெரிக்கா... பிரித்தானியா தொடர்பில் ட்ரம்ப் சொன்ன வார்த்தை
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுக்கும் போரில் நேச நாடுகள் உதவ மறுத்ததை அடுத்து நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றும் முடிவில் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்ளவில்லை
அமெரிக்காவின் விலகல், மேற்கத்தியப் பாதுகாப்புத் தலைவர்களுக்குப் பேரழிவாக அமையக்கூடும்; 3.8 டிரில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அமெரிக்க இராணுவ பலத்தின் துணையின்றி, தங்கள் நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அவர்கள் திணறுவார்கள் என்றே கூறப்படுகிறது.

ஆனால், உலகம் இதுவரை கண்டிராத, மிகவும் பயனுள்ள ஒரே இராணுவக் கூட்டணி நேட்டோ என கெய்ர் ஸ்டார்மர் வாதிட்டுள்ளார். இருப்பினும், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுக்கும் போரில் தாங்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருவதை நேச நாடுகள் கண்டுகொள்ளவில்லை என்றே ட்ரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார்.
நேட்டோ அமைப்பு வெறும் காகிதப் புலி என விளாடிமிர் புடின் முன்பு சொன்னது உண்மையே என்றும் ட்ரம்ப் கொந்தளித்துள்ளார். அமெரிக்காவின் நேச நாடுகளை மிக மோசமான கூட்டணி என முத்திரை குத்தியுள்ள ட்ரம்ப், எரிபொருள் தேவையா ஹார்முஸ் நீரிணைக்குச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
இதனிடையே, நேட்டோவில் இருந்து விலகும் முடிவில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, இதை மறுபரிசீலனை செய்யவே முடியாது என்றுதான் சொல்வேன் என பதிலளித்துள்ளார்.
நேட்டோவால் தாம் ஒருபோதும் ஈர்க்கப்பட்டதில்லை. அது ஒரு காகிதப் புலி என்பது எனக்கு எப்போதுமே தெரியும், சொல்லப்போனால் புடினுக்கும் அது தெரியும் என்றார்.

இது இஸ்ரேலுக்கான போர்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஈரான் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த, எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
மேலும், எரிபொருள் பற்றாக்குறை உலகளாவிய பொருளாதார மந்தநிலையை அச்சுறுத்தும் போதிலும், நேட்டோ இந்த மோதலில் தீவிரமாக ஈடுபடத் தயக்கம் காட்டி வருகிறது.

இது இஸ்ரேலுக்கான போர் என்பதை உணர்ந்த பல நாடுகள், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. உக்ரைன் விவகாரம் தங்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல என்ற போதும், அமெரிக்கா அந்த நாட்டிற்காக தலையிட்டதாக கூறும் ட்ரம்ப்,
அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றார். இதனிடையே, பிரித்தானியாவை மீண்டும் சீண்டிய ட்ரம்ப், ராயல் கடற்படை இனி ஒரு போதும் எந்த நாட்டிற்கும் போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |