மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்ட தமிழன் நடராஜன்!
மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமிழக வீரர் நடராஜன் மகளுக்கு வாழ்த்து சொல்லி உருக்கமான பதிவையும் எழுதியுள்ளார்.
அந்த உருக்கமான வாழ்த்து பதிவில் ஹன்விகா (மகள் பெயர்) எங்களது சின்ன தேவதை.. என்னுடைய எல்லாத் திட்டங்களுக்கு இடையே அவள் பிறந்தாள்.
எதிர்பாரதவிதமாக நான் அப்போது அவுஸ்திரேலியாவில் இருந்தேன். அவள் பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. என்னுடைய எல்லாத்திட்டங்களை தாண்டி நான் அவளுடன் இருக்கிறேன்.
நான் அவளுடன் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை கணிக்க முடியாததாய் இருக்கிறது. இந்தத் தருணங்கள் விலை மதிக்க முடியாதவை என குறிப்பிட்டுள்ளார்.