இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற 3 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் முகம் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க 3 பொருட்கள் மட்டும் வைத்து தயாரிக்கப்படும் இந்த face pack போதும்.
தேவையான பொருட்கள்
- வெந்தய பொடி- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- காய்ச்சாத பால்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் வெந்தய பொடி, கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
தொடர்ந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து மென்மையான பேஸ்ட்போல் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தும் முன், முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பின் இந்த பேஸ்பேக்கை கழுத்திலிருந்து தொடங்கி கீழிருந்து மேல் நோக்கி தடவி 20 நிமிடங்கள் நன்கு உலரவிடுங்கள்.
இறுதியாக குளிர்ந்த நீரால் மென்மையாக மசாஜ் செய்து விட்டு, பிறகு நன்கு முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |