நிரந்தரமாக நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இலை.., எப்படி பயன்படுத்துவது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
இதற்கு ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற கறிவேப்பிலை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1கைப்பிடி
- கருப்பு எள்- சிறிதளவு
- நெல்லிக்காய்- 2
- ரீத்தா- 3
- பச்சை மஞ்சள்- 2 துண்டு
- அக்ரூட் பருப்புகள்- 2
- பாதாம்- 7
- கடுகு- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் கடாயில் கடுகு மற்றும் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும்.
பின் சூடான எண்ணெயில் கறிவேப்பிலை, கருப்பு எள், நறுக்கிய நெல்லிக்காய், விதைகள் நீக்கிய ரீத்தா, பச்சை மஞ்சள், அக்ரூட் பருப்புகள், நறுக்கிய பாதம் சேர்த்து சூடாக்கவும்.
எண்ணெய் நிறம் மாறத் தொடங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
அதன் பிறகு, எண்ணெயை நன்கு ஆறவைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைத்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி இயற்கையான முறையில் கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |