நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை: எப்படி தயாரிப்பது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை ஹேர் டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
- அவுரி இலை பொடி- 3 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 2 ஸ்பூன்
- கரிசிலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- எலுமிச்சை- 1
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு கடாயில் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கருப்பாகும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் அவுரி பொடியை சேர்த்து கருப்பாகும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் கரிசிலாங்கண்ணி பொடியை சேர்த்து கருப்பாகும்வரை வறுத்து இறக்கிவைத்து இதை நன்கு ஆறவைக்கவும்.
பின்னர் இதில் மருதாணி பொடி, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக இதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து ஒரு நாள் இரவு முழுக்க தட்டு போட்டு மூடி வைக்கவும்.
இந்த ஹேர் டையை தலைமுடியில் நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின் இதனை ஷாம்பு பயன்படுத்தி அலசாமல் வெறும் தண்ணீர் கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |