உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் சிறுநீரக கல் பிரச்சினையாக தான் இருக்குமாம்! உஷாரா இருங்க
பொதுவாக இன்றைய காலத்தில் உணவு பழக்க வழக்க மாற்றம், மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப சிறுநீரக கற்கள் பிரச்சனை பரவலாக பெருகி வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது.
உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை, சிறுநீர்க் குழாயின் எந்தப் பகுதியிலும் கழிவுப்பொருட்களின் படிகங்களால் சிறுநீர் கற்கள் உருவாகலாம்.
இதனால், இடுப்பு பகுதியில் மிகவும் கடிமான வலி உண்டாகும். சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
அந்தவகையில் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன? இதனை எப்படி கரைக்க என்ன மாதிரியான இயற்கை வழிமுறைகள் இருக்கின்றது என்பதை இங்கு பார்ப்போம்.
அறிகுறி
- சிறுநீரக கற்கள் இருந்தால், அது முதுகுப் பகுதியின் ஒரு பக்கம் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
- சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் மற்றும் இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவையும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
-
சிறுநீரக கற்கள் இருந்தால், கழிக்கும் சிறுநீரில் மிகச்சிறிய அளவிலான சரளைக்கற்கள் இருக்கும். ஆனால் இந்த கற்கள் வலி எதையும் ஏற்படுத்தாது.
-
சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை அனுபவிக்கக்கூடும். சில நேரங்களில் காய்ச்சலும் வரக்கூடும்.
-
சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்க நேரிடும். இது ஒரு ஆரம்ப கால சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
- சிறுநீரக கற்கள் முற்றிய நிலையில் இருந்தால், தாங்க முடியாத அளவில் வலியை சந்திப்பதோடு, உட்காரவோ, நிற்கவோ அல்லது படுக்கவோ முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
- ஒருவர் தினமும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், சிறுநீரில் உள்ள அதிகப்படியான கனிமச்சத்துக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
-
எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒன்றாக கலந்து குடித்துவிட்டு, அதனைத் தொடர்ந்து 12 அவுன்ஸ் சுத்தமான நீரைக் குடிக்க வேண்டும். பின் 1/2 எலுமிச்சையை 12 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி அடிக்கடி குடித்தால், விரைவில் சிறுநீரக கற்கள் கரையும்.
- சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வை விரைவில் பெற தினமும் இருவேளை சீமை சாமந்தி வேர் 500மிகி இதனை எடுக்க வேண்டும்.
- சிறிது கிட்னி பீன்ஸை கொதிக்கும் நீரில் 6 மணிநேரம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைத்து நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.
- சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சீக்கிரம் சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- செலரியைக் கொண்டு டீ தயாரித்து குடிக்க வேண்டும் அல்லது செலரி விதைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
- 1 ஸ்பூன் துளசி ஜூஸ் உடன் சிறிது தேன் கலந்து, தினமும் என ஆறு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.