உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு - ஏன் தெரியுமா?
பொதுவாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் தலைநகரம் இருக்கும். அந்த தலைநகரத்தில் தான் நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும்.
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டின் தலைநகரில் தான் வசிப்பார்கள். நாட்டிற்கு மட்டுமல்லாது நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கூட தலைநகரங்கள் இருக்கும்.
ஆனால், உலகின் ஒரே நாடு மட்டும் தலைநகரம் இல்லாமல் இயங்கி வருகிறது.
தலைநகரே இல்லாத ஒரே நாடு
தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான நவூரு (Nauru) உலகில் அதிகாரப்பூர்வமாக தலைநகரே இல்லாத ஒரே நாடாகும்.

வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள நவூரு, பரப்பளவில் உலகின் 3 வது சிறிய நாடாக உள்ளது.
மேலும், சுமார் 10,000 மக்கள்தொகையுடன், மக்கள்தொகை அடிப்படையில் 2வது சிறிய நாடாகவும் உள்ளது.

நவூருவின் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகங்கள், அமைச்சகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை யாரென் மாவட்டத்தில் இருந்து செயல்படுகிறது.

அதிகாரபூர்வ தலைநகரம் நாட்டிற்கு இல்லாவிட்டாலும், யாரென்(Yaren) அரசின் நிர்வாக மையமாக உள்ளது.
சிறிய அளவிலான நிலப்பரப்பு மற்றும் குறைந்த மக்கள் தொகையே நவூருவிற்கு தலைநகரம் இல்லாததற்கு காரணமாக கூறப்படுகிறது.

தலைநகரம் இல்லாத சிறிய நாடாக இருந்தாலும், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறது.
நவூரு அவுஸ்திரேலிய டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக பயன்படுத்துகிறது.

முன்னொரு காலத்தில், நவூரு இனிமையான தீவு (Pleasant Island) என அழைக்கப்பட்டு வந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |