2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தமிழ் வம்சாவளிப் பெண்
South Africa's Navanethem ‘Navi’ Pillay wins 2026 Nobel Peace Prize: 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவின் நவி பிள்ளை என்னும் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது.
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எனக்கு நோபல் பரிசு வேண்டும் என சின்னப்பிள்ளை போல அடம்பிடித்துக்கொண்டும், எனக்குத் தரமாட்டார்கள் என திருவிளையாடலில் வரும் தருமியைப் போல புலம்பிக்கொண்டும் இருந்தார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்திய, தமிழ் வம்சாவளியினரான நவி பிள்ளை என்னும் நவநீதம் பிள்ளைக்கு (85) வழங்கப்பட்டுள்ளது.

நவநீதம் பிள்ளை, 1941ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நாராயண்சாமி நாயுடு, சாந்தம்மா நாயுடு தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் ஆவார்.
அவரது தாத்தா, பாட்டி, 1890களில், தென்னாப்பிரிக்க கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.

சர்வதேச சட்டத்திற்கு நவநீதம் பிள்ளை ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நவநீதம் பிள்ளை, ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் தலைவரும், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரல்லாத முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை பெற்றவரும் ஆவார்.