இடுப்பு வலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்
Exercise
Yoga
Back Pan
By Kishanthini
இப்போது எல்லாம் கொஞ்சம் வேலை செய்தாலே போதும் இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, உடல் சோர்வு என்ற பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
முன்னெல்லாம் வயதான பிறகு தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தனர்.
ஆனால் இப்போது இளம் வயதிலேயே இடுப்பு வலி பிரச்சினைகளை அதிகம் சந்திக்கின்றன.
இதனை போக்க ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. அதில் தற்போது இடுப்புவலியை குறைக்கும் பயிற்சி ஒன்றை பார்ப்போம்.
பயிற்சி
-
விரிப்பில் நேராக படுத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும்.
- பிறகு மூச்சை இழுத்துக்கொண்டே கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும்.
- கைகளை கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும். பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
-
இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெதுவாக சாதாரண நிலைக்கு வரவேண்டும்.
- இதே போல் மூன்று முறைகள் செய்யவும். ஒவொரு முறை செய்யும் போது ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
நன்மைகள்
- முகத்திலுள்ள எல்லா தசைகளும் சிறப்பாக செயல்பட்டு முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளும்.
- சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் இந்த ஆசனம் செய்தால் குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது.
- கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி நீங்கி முதுகெலும்பு பலம் பெறும். சிறுநீரக உறுப்பை வலுவாக்கும்.
- இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
- உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்யும்.
-
பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை, ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு பிரச்சனை ஆகியவை சரியாகும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US