உங்களுக்கு தகுதியானது கிடைத்தே தீரும்! கோலியை வம்பிழுத்த வீரரின் பதிவு
கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோலியுடன் வாக்குவாதம்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், பெங்களூரு அணி வீரர் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் போட்டி முடிந்தபோது மீண்டும் இருவரும் மோதிக் கொண்டனர். மேலும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும், விராட் கோலியுடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கோலி, நவீன் மற்றும் கம்பீர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நவீன் உல் ஹக்கின் பதிவு
இந்த நிலையில், நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில், 'உங்களுக்கு தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள், அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே செல்லும்' என கூறியுள்ளார்.
நவீன் உல் ஹக்கின் இந்தப் பதிவு கோலியை கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வீரரான நவீனுக்கு இது முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.