வலுவடையும் NDA கூட்டணி., 2026 தேர்தலில் தி.மு.க.விற்கு அதிகரிக்கும் சவால்கள்
தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் உருவாகி வருகின்றன.
IBC Tamil-க்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் மணி, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வலுவாகி வரும் நிலையில், தி.மு.க.விற்கு 2026 தேர்தலில் கடினமான சூழல் உருவாகும் வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அதிமுக, பாஜக, TTV தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதால், தி.மு.க.வின் எதிர்காலம் சவாலாக மாறும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவின் ஆதரவு, மேலும் TTV தினகரனின் NDA கூட்டணியில் இணைவு ஆகியவை, கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய காரணிகளாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தற்போது மக்கள் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது 2026 தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கும் என மணி குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துப்படி, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை, தேசிய அரசியலுடன் இணைந்து நகரும் போது, திமுகவின் ஆதிக்கம் குறையக்கூடும். குறிப்பாக, மக்கள் விருப்பம் மாற்றம் அடைந்தால், புதிய கூட்டணிகள் வலுவாகும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறியுள்ளார்.
அவரது முழுமையான பதிவுகளை இந்த காணொளியில் பார்க்கவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |