பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஜேர்மன் சேன்ஸலரிடம் விவாதித்த இந்தியா

Germany
By Balamanuvelan Oct 26, 2024 11:29 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், அந்த குழந்தை தொடர்பில் ஜேர்மன் சேன்ஸலருடன் விவாதித்துள்ளார் இந்திய பிரதமர்.

என்ன பிரச்சினை?

குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும் அவரது மனைவியான தாராவும், 2018ஆம் ஆண்டு ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள். 2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு அரிஹா என்னும் பெண் குழந்தை பிறந்தது.

லண்டனில் புலம்பெயர்தல் எதிர்ப்பு, இனவெறுப்பு எதிர்ப்பு பேரணிகள் நடத்த திட்டம்: தயார் நிலையில் பொலிசார்

லண்டனில் புலம்பெயர்தல் எதிர்ப்பு, இனவெறுப்பு எதிர்ப்பு பேரணிகள் நடத்த திட்டம்: தயார் நிலையில் பொலிசார்

பேத்தியைப் பார்ப்பதற்காக அரிஹாவின் பாட்டி இந்தியாவிலிருந்து ஜேர்மனி வந்துள்ளார். அப்போது, ஒரு நாள், எதிர்பாராதவிதமாக பாட்டியால் குழந்தைக்கு காயம் ஏற்படவே, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, குழந்தையை கைப்பற்றி, அரசு காப்பகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அரிஹா ஜேர்மனியில் காப்பகம் ஒன்றில் வளர்ந்துவருகிறாள்.

குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டு வர கோரிக்கை

அரிஹாவின் குடும்பத்தினர் ஜைன கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். சைவ உணவு உண்பவர்கள். ஆனால், அரிஹா ஜேர்மனியில் வளர்ந்தால், இந்திய மற்றும் ஜைன கலாச்சாரங்களில் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: ஜேர்மன் சேன்ஸலரிடம் விவாதித்த இந்தியா | Ndian Child Living Germany After Separation Parent

ஆகவே, தங்கள் குழந்தை தங்கள் கலாச்சாரத்தில் வளரவேண்டும் என்றும், அவளை இந்தியாவுக்குக் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் ஜேர்மனி அரசை கோரிவருகிறார்கள் அரிஹாவின் குடும்பத்தினர்.

ஜேர்மன் சேன்ஸலரிடம் விவாதித்த இந்தியா

இந்நிலையில், அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸிடம், குழந்தை அரிஹா குறித்து இந்திய பிரதமர் மோடி விவாதித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, தான் அரிஹா வழக்கை மிக கவனமாக பின்தொடர்ந்துவருவதாக ஜேர்மன் சேன்ஸலரும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US