வெறும் 30 நிமிட அவகாசம்... 10,000 அரசு ஊழியர்களுக்கு வேட்டுவைத்த ட்ரம்ப் மற்றும் மஸ்க்
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது சிறப்பு ஆலோசகர் எலோன் மஸ்க் ஆகியோரால் ஒரேயடியாக சுமார் 10,000 அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தேவைக்கு அதிகமாக
குறித்த ஊழியர்கள் அனைவரும் உள்விவகாரம், எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், மனித உரிமைகள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான ஊழியர்கள், வேலைக்கு சேர்ந்து ஓராண்டுகள் மட்டுமே நிறைவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இன்னொரு 75,000 அரசு ஊழியர்கள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் மஸ்கின் வாக்குறிதியை ஏற்றுக்கொண்டு வேலையை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தேவைக்கு அதிகமாக ஓவொரு துறையிலும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வீண் விரயம் மற்றும் மோசடிக்கு அதிக பணம் இழக்கப்படுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் சுமார் 36 டிரில்லியன் டொலர் கடனில் உள்ளது என்றும் கடந்த ஆண்டு 1.8 டிரில்லியன் டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எலோன் மஸ்கின் கடும்போக்கு நடவடிக்கைகள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதராவாளர்கல் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
30 நிமிட அவகாசம்
மேலும், உரிய அதிகாரிகளிடம் எலோன் மஸ்க் ஆலோசனை நடத்துவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. அரசு ஊழியர்களை அதிரடியாக வேலையில் இருந்து நீக்குவதுடன், ட்ரம்ப் மற்றும் மஸ்க் தொழில்முறை ஊழியர்களுக்கான சிவில் சர்வீஸ் பாதுகாப்புகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.
மட்டுமின்றி, குறிப்பிட்ட சில அமைப்புகளுக்கு நிதியுதவியை ரத்து செய்வதுடன், சில அரசாங்க அமைப்புகளை மூடவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள தகுதிகாண் ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள மற்றவர்கள் கட்டாய வெளியேற்றத்திற்கு இலக்காகியுள்ளனர்.
ஊழியர்களுக்கு வெறும் 30 நிமிட அவகாசம் அளிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வனவகுப்பில் சமீபத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 3,400 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மஸ்கின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |