மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம்... எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
புடினை நம்ப வேண்டாம்
உக்ரைனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையிலேயே, மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம் என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
போர் நிறுத்தம் செய்ய தாம் தயாரென புடின் கூறுவதை உலகத் தலைவர்கள் நம்ப வேண்டாம் என்று தாம் எச்சரித்து வருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் தொலைபேசியில் விவாதித்ததன் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில்,
உக்ரைன் வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன், வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன் என்றார்.
இதனிடையே, மூன்று வருட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் வலியுறுத்தியுள்ளார்.
வாய்ப்பு இல்லை
புதன்கிழமை இரவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 90 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி பேச்சுவார்த்தைகளை அறிவித்தார்.
ஆனால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை என்று அவரது பாதுகாப்பு செயலாளர் எச்சரித்தார். இந்த நிலையில், ட்ரம்ப் ஒரே நேரத்தில் தன்னுடனும் புடினுடனும் பேசுவதே தனது அசல் திட்டமாக இருந்ததாகத் தெரிவித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆதரவைப் பராமரிப்பது என்பது தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |