ரஷ்ய கடற்கரையில் ஒதுங்கிய 484 சீல் சடலங்கள்! விசாரணை தீவிரம்
ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் நூற்றுக்கணக்கான சீல்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கவலைகளை தூண்டியது.
அழிந்து வரும் சீல்கள்
காஸ்பியன் கடலின் கடற்கரையில் கிட்டத்தட்ட 500 அழிந்து வரும் சீல்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. 
இது கவலைகளைத் தூண்டியதைத் தொடர்ந்து, 300 கிலோமீற்றர் பரப்பில் கடற்கரையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக, தகெஸ்தானின் இயற்கை வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை 484 சீல் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. பல கடலோர மாவட்டங்களில் அதன் தேடல் விரிவடைந்துள்ளது.
சடலங்களை சேகரித்து அப்புறப்படுத்தவும், இறப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவித்தனர்" என கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சீல் இறப்புகள்
மேலும், இடம்பெயர்வு பருவத்தில் ஆண்டுதோறும் சீல் இறப்புகள் ஏற்படுவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடலோரப் படுக்கையில் இருந்து இயற்கை எரிவாயு வெளியேறுவதால் ஏற்படும் மூச்சுத்திணறல் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக அமைச்சகம் சமீபத்திய ஆராய்ச்சியையும் மேற்கோள் காட்டியது.
இதற்கிடையில், அதிகாரிகள் மனித காரணங்களை குறைத்து மதிப்பிடுவதாக சுற்றுச்சூழல் குழுக்கள் வாதிடுகின்றன. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |