டி20 உலகக்கிண்ணம்: பார்ட்மேனின் அசுரவேகத்தில் காலியான நெதர்லாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது.
நியூயார்க்கில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் மைக்கேல் லேவிட் ரன் எடுக்காமல் ஜென்சென் பந்துவீச்சிலும், மேக்ஸ் ஓடவுட் 2 ஓட்டங்களில் பார்ட்மேன் ஓவரில் ஆட்டமிழந்தனர்.
A superb bowling display from South Africa led by Ottneil Baartman's four-wicket haul restricts Netherlands to 103/9 in New York ?#T20WorldCup | #NEDvSA | ?: https://t.co/byjjtT5rvp pic.twitter.com/BLSGw4Zbkj
— ICC (@ICC) June 8, 2024
அடுத்து வந்த விக்ரம்ஜித் 12 ஓட்டங்களில் இருந்தபோது ஜென்சென் ஓவரில் கிளீன் போல்டு ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த லீடே (6), நிதமனுரு (0), ப்ரிங்கிலே (0) ஆகியோர் நோர்க்கியா, பார்ட்மேன் பந்துவீச்சில் வெளியேறினர்.
எனினும் ஏங்கேல்பிரேட் 40 ஓட்டங்களும், வான் பீக் 23 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் நெதர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பார்ட்மேன் 4 விக்கெட்டுகளும், ஜென்சென் மற்றும் நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Wreaking havoc in New York ?
— ICC (@ICC) June 8, 2024
Netherlands are 35/4 at the 10-over mark courtesy of a fiery bowling display from South Africa.#T20WorldCup | #NEDvSA | ?: https://t.co/W1HqWiLrVF pic.twitter.com/Z1ykGADpCZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |