இலங்கையில் நடந்த போர்...சிரியாவைப் போன்று சர்வதேச விசாரணை தேவை: ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதம்
இலங்கையில் நடந்த போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தும் படி ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கையின் தமிழ் கட்சிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ராணுவத்தினருக்கும் சிறுபான்மை தமிழ் அமைப்புகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
இந்த போரின் போது, சிறுபான்மை தமிழா்களின் உரிமைகளை இலங்கை இராணுவத்தினா் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துமாறு பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இலங்கையைச் சோ்ந்த சிறுபான்மை தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கடந்த 15-ஆம் திகதி கடிதம் எழுதியுள்ளன.
அதில், இலங்கைப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சிரியாவில் அமைக்கப்பட்டதைப் போன்ற சா்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அந்தக் குழுவானது தனது விசாரணையை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.
மனித உரிமை மீறல் தொடா்பான விசாரணை ஓராண்டு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசே முழு பொறுப்பு என்ற தீா்மானத்தையும் நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
போரில் இருதரப்பினா் சார்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 3 முறை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இருப்பினும், இலங்கை அரசு அதை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு அத்தீா்மானங்களிலிருந்து வெளியேறிவிட்டது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழ் அமைப்புகள், இது தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
இதற்காக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாயிலாக இலங்கை அரசின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் மகிந்த ராசபக்ச அதிபராக பதவி வகித்த போது, சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.