முதுகுவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாருங்க
உலகம் முழுவதும் அனுபவிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் முதுகு வலியும் ஒன்றாகும்.
தற்போது, பல தொழில்களில் உள்ள வல்லுநர்கள் இந்த சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனை எளிய முறையில் போக்க ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. தற்போது அதில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
செய்முறை
பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி, கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும்.
அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து, வாயை மூடி மூச்சை சத்தமாக வெளியே தள்ளவும்.
பின்னா் தோள்பட்டை முதுகை வலதுபக்கம் நன்றாக திருப்பி 10 மூச்சு தள்ளவும்.
பின்னா் ஓய்வெடுத்து இடதுபுறம் 10 மூச்சு தள்ளவும். பத்மாசனத்தில் அமர முடியாதவர்கள் சாதாரணமாக அமர்ந்தும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
பலன்கள் :
- முக தேஜஸ் உண்டாகும்.
- முதுகுவலி அகலும்.
- இதயம் நன்றாக பலம்பெறும்.
- பத்ம உஜ்ஜயி பலன்கள் இதற்கும் கிடைக்கும்.