நீரிழிவு முதல் பல நோய்களுக்கு தீர்வு வேண்டுமா? அப்போ மறக்காமல் தினமும் இந்த பயிற்சியை செய்திடுங்க
yoga
diabetes
exercise
By Kishanthini
யோகாசனம் செய்வது நமது உடல் மற்றும் மனத்துக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். யோகாசனத்தில் முக்கிய ஆசனமான கூர்மாசனம் அல்லது ஆமை போஸ் யோகா என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆமை வடிவத்தைப் பிரதிபலிக்கும்.
இந்த ஆசனம் கால்கள், வயிறு, தொடைகள் மற்றும் தொடை எலும்புகளை நீள்சியடைய செய்ய உதவும்.
அதுமட்டுமின்றி பல நோய்களுக்கு உதவுகின்றது.
அந்தவகையில் இதனை எவ்வாறு செய்வது? இதில் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி செய்வது?
- ஆமை வடிவ கூர்மாசனம் செய்வதற்கு முதலில், அமர்ந்து இரு கால்களையும் விரித்துக் கொள்ளுங்கள், பின் இரு கைகளையும் உங்களுக்கு இருபக்கமும் நீட்டிக் கொள்ளவும்.
- கைகளை இரு கால்களுக்கு அடியில் அல்லது இடுப்பு மற்றும் தொடைக்கு பின் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். பின்னர் தொடைகளை தரையில் அழுத்தி மார்பை உயர்த்த முயற்சிக்கவும்.
- கால்களை முடிந்த வரை நீட்டி, ஆழமான சுவாசியுங்கள். இந்த போஸில் உங்களின் இரண்டு கால்கள் மற்றும் கைகள், கன்னம் மற்றும் மார்பு ஆகியவை தரையில் இருக்கும்.
- பின்னர் 2 அல்லது 3 நிமிடங்கள் அதே நிலையில் மூச்சினை உள்ளிழுத்து சுவாசியுங்கள். பின்னர் நிதானமாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புங்கள்.
நன்மைகள்
- நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் முடியும்.
- உங்கள் உடலில் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துதவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.
- உடலின் அனைத்து தசைகளையும் நீள்சியடையவும், செயல்படுத்தவும் உதவுகிறது
- வயிறு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பிற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
- மன அமைதி அடையும்.
குறிப்பு
- எந்த ஒரு யோகாசனம் செய்யும் போதும் தகுந்த நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்வது மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US