முதுகெலும்பை வலிமையுடன் வைத்திருக்க வேண்டுமா? அப்போ மறக்காமல் இந்த பயிற்சியை செய்திடுங்க
பொதுவாக தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், எடையைக் கட்டுக்குள் வைத்தால், எலும்பு வலிமை பெறும்.
அந்தவகையில் இன்று முதுகெலும்பை வலிமையுடன் வைத்திருக்க உதவும் ஊர்துவதனுராசனம் எப்படி செய்யலாம்? இதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன என்பதை பார்ப்போம்.
- தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கால்களை மடக்கி உடலுக்கு நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும்.
- கால்களுக்கு இடையே சற்று
இடைவெளி இருக்கட்டும். கைகளை, தலைப் பக்கம் கொண்டுவந்து உள்ளங்கை, விரல் உடலைப் பார்த்தபடி தரையில் பதிக்கவும்.
- இப்போது மூச்சை நன்கு
இழுத்துக் கை, கால்களைத் தரையில் அழுத்து உடலை உயர்த்த வேண்டும். முடிந்தவரை வயிறு பகுதி மேலே வரும் அளவுக்கு உடலை வில் போல வளைக்க
வேண்டும்.
- இப்போது உடலின் முழு எடையும் கை - கால்களில் இருக்கும். இந்த நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும்.
குறிப்பு
ஒரு நாளைக்கு இதை ஆறு முறை வரை செய்யலாம். இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
பலன்கள்
- தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும்.
- கூன் விழுவது தவிர்க்கப்படும்.
- உடல் புத்துணர்வு பெறும். கை, கால்கள் பலம் பெறும்.
- நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.