தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு கொரோனாவா? கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி..
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கம் வென்று இந்தியாவிற்கு மாபெரும் சிறப்பை தேடி தந்தவர் நீரஜ் சோப்ரா.
இறுதி சுற்றில் 87.58மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். இவரை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 7-ஆம் திகதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் கடுமையான காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூன்று நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையாத காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியது. இதைத்தொடர்ந்து நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.