வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஜேர்மனியில்: காரணம் இதுதான்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்தவர் நீரஜ் சோப்ரா.
பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்குத் திரும்பவில்லை. மாறாக, அவர் ஜேர்மனிக்குச் சென்றுள்ளார்.
காரணம் என்ன?
நீரஜ் சோப்ராவுக்கு இடுப்பில் காயம் காரணமாக அவதியுற்றுவந்தார். ஆகவே, அது தொடர்பில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக அவர் ஜேர்மனிக்குச் சென்றுள்ளார்.
ஏற்கனவே அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கோள்ள அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அவர் அதை தள்ளிவைத்திருந்தார்.
ஆக, அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும் நிலையில், தனது உடல் நிலை தொடர்பில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக ஜேர்மனி சென்றுள்ள நீரஜ் சோப்ரா, சுமார் ஒன்றரை மாதம் வரை அங்கு தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |