2024 பாரிஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!
2024 பாரிஸ் ஒலிம்பிக்-கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
வெள்ளிப் பதக்கம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்-கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்டோர் போட்டி போட்டனர்.
Neeraj Chopra secures his second Olympic medal! ??? pic.twitter.com/qUq4NVyQxx
— The Olympic Games (@Olympics) August 8, 2024
இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் சுமார் 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர்
இதில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அத்துடன் இதுவரை ஒலிம்பிக்கில் அதிகபட்ச தூரமாக இருந்த 90.57 மீட்டர் சாதனை தூரத்தை அர்ஷத் முறியடித்துள்ளார்.
When excellence gets a silver shine!???Neeraj Chopra ?? pic.twitter.com/N1FldJs5LQ
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 8, 2024
அர்ஷத் நதீம் தனது 6வது முயற்சியிலும் 90 மீட்டருக்கு மேல் துக்கி எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் ஈட்டியை தூக்கி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |