நீர்கொழும்பில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்: கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்
இலங்கையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக நீர்கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

தெபா எல மற்றும் சிறு ஓடைகள் தண்ணீர் பெருக்கெடுத்தன் விளைவாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியாயவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல ஆகிய பகுதிகளில வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு நீர் புகுந்துள்ளன.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அவசர முகாம்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தன்னார்வலர்கள் படகுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |